தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் விழிப்புணர்வுக் கலந்துரையாடல் எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமை கிழக்கில் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் காலை 9 மணிக்கு இலங்கைத் தமிழரசுக்  கட்சியின் பட்டிருப்புத் தொகுதித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பா.அரியநேத்திரன் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் ஆரம்பமாகும்.

இதில் சிறப்பு பேச்சாளராகக் கலந்துகொள்ளும் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., மக்களின் அனைத்துவிதமான கேள்விகளுக்கும் விளக்கம், தெளிவுரை வழங்குவார்.

இந்தக் கலந்துரையாடலில் மக்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.