வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் நாகரீகம் கல்வியை சார்ந்த நாகரீகமாகும். கல்வியிலே முதலிடம் பெற்ற மாகாணம் வடமாகாணம். ஆனால் அரசியல் சமூக காரணங்களினால் இன்று வீழ்ந்துபோயுள்ளோம் . எனவே வடமாகாணத்தை மீள கட்டியெழுப்ப எனக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொண்டு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என தெரிவித்தார்.

அருள் கல்வி வட்டம் நடத்தும் 2019 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சை மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

சட்டத்தரணி வே.தேவசேனாதிபதியின் அனுசரணையில் நடைபெறும் இந்த கருத்தரங்கு எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.