ஜனாதிபதி தலைமையில்.இலங்கை கம்போடியா வர்த்தக மாநாடு 

Published By: Digital Desk 4

07 Aug, 2019 | 08:34 PM
image

கம்போடிய நாட்டின் விசேட அழைப்பின்பேரில் அந்நாட்டுக்கு அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இலங்கை மற்றும் கம்போடிய வர்த்தகர்களின் சந்திப்பொன்று இன்று (07) Phnom Penh நகரில்  இடம்பெற்றது.

Sri Lanka-Cambodian Business Forum was held under President’s patronage, broad attention was drawn to enhance trade relations between the two countries

இந்த நிகழ்வில் கம்போடிய பிரதமர் Samdech Akka Moha Sena Pakdei Techo HUN SEN கலந்துகொண்டார்.

இலங்கை மற்றும் கம்போடியாவிற்கிடையில் வர்த்தக உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கு இதன்போது விரிவான கவனம் செலுத்தப்பட்டதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்ற வகையில் பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் இணைந்து செயற்படவும் ஆடைகள், இரத்தினக்கல், கைத்தொழில் போன்ற பல்வேறு துறைகளில் இரண்டு நாடுகளுக்குமிடையில் இருந்துவரும் உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த மாநாட்டில் கம்போடிய பிரதமர் விசேட உரையொன்றை ஆற்றியதுடன், இலங்கை சார்பாக இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்கவும் மாநாட்டில் உரையாற்றினார். 

கம்போடிய வர்த்தக குழுவின் தலைவர் Neak Okhna Kith Meng மற்றும் இலங்கை கொழும்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் சாரங்க விஜேரத்ன உள்ளிட்ட இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37