குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு பிடியாணை 

Published By: Digital Desk 4

07 Aug, 2019 | 08:05 PM
image

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் இன்று (07) பிடியாணை பிறப்பித்துள்ளது.

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் கடந்த யூன் மாதம் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் அன்பளிப்பாக வழங்கப்பட்ட பெருந்தொகை நிதி கொள்ளையிடப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சிப் பொலிசார் விடுதியில் பொருத்தப்;பட்ட சீ.;சீ.ரீவி கமரா பதிவுகள் என்பவற்றை அடிப்படையாக வைத்து சந்தேக நபர்; ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து, குறித்த சந்தேக நபர் இன்று(07) வரையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இன்றைய தினம் (07) மேற்படி சந்தேக நபரை கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ரீ.சரவணராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து முறைப்பாட்டாளர் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட பலரைக் கைது செய்யவேண்டியுள்ளதாக பொலிசார் தெரிவித்தாலும் சந்தேக நபருக்கு சார்பாகவே செயற்படுவதாகவும் இன்றைய தினம் குற்றத்தடுப்;பு பொறுப்பதிகாரி மன்றில் ஆஜராகவில்லை எனவும் தெரிவிக்;கப்பட்;டது.

இதனைக்கவனத்திலெடுத்து மன்று மேற்படி சந்தேகநபரை எதிர்வரும் 21ம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எதிராக கிளிநொச்சி உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருந்து உற்பத்தி திறனை துரிதமாக அதிகரிக்க...

2025-01-18 15:55:31
news-image

உள்ளூராட்சி தேர்தலை காலம் தாழ்த்த முயன்றால்...

2025-01-18 15:56:17
news-image

புங்குடுதீவில் குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

2025-01-18 18:22:23
news-image

சம்மாந்துறையில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய...

2025-01-18 18:15:19
news-image

2026இல் மறுமலர்ச்சியின் தைப்பொங்கலாக கொண்டாடுவோம் -...

2025-01-18 22:11:38
news-image

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோவிலில் தேசிய...

2025-01-18 17:13:58
news-image

வருமான வரி பரிசோதகர்கள் என கூறி...

2025-01-18 16:41:05
news-image

களுத்துறையில் பாலமொன்றுக்கு அருகில் குப்பை கூளங்களில்...

2025-01-18 16:55:31
news-image

கம்பஹா ரயில் நிலையத்திற்கு அருகில் போதைப்பொருளுடன்...

2025-01-18 16:02:19
news-image

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தால் விவசாயிகள்...

2025-01-18 16:09:52
news-image

இ. போ. சபையின் பஸ் சாரதி,...

2025-01-18 15:59:24
news-image

மாத்தறையில் ஹெரோயின், துப்பாக்கியுடன் இருவர் கைது

2025-01-18 15:34:10