இந்திய முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமதி.சுஷ்மா சுவராஜின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனுதாபம் தெரிவித்திருக்கிறார்கள். 

இரு நாடுகளுக்கு இடையிலும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு உதவிய இலங்கையின் உண்மையான ஒரு சினேகிதி என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார். 

மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவதன் மூலம் அரசியலிலும் இராஜதந்திரத்திலும் முக்கியத்துவம் வாய்ந்த முத்திரையை சுஷ்மா சுவராஜ் பதித்திருக்கிறார் என்றும் ஜனாதிபதி தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்திருக்கிறார். 

இதே வேளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அனுதாபச் செய்தியில், சுஷ்மா சுவராஜ் இலங்கையின் உண்மையான நண்பி, அயலவர், உறவினர் என்று கூறியிருக்கிறார். 

அவர் வெளியுறவு அமைச்சராக இருந்த காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பல உச்சங்களை தொட்டது என்றும் பிரதமர் ரணில் தெரிவித்திருக்கிறார்.