வரவு செலவு திட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அனுமதி

Published By: Vishnu

07 Aug, 2019 | 07:40 PM
image

(நா.தினுஷா) 

நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனையில் முன்மொழியப்பட்ட வரிச் சலுகைகளுக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

 

மேலும் தேசத்தை கட்டியெழுப்பும் வரித் திருத்தச் சட்டம் மற்றும் பெறுமதி சேர் வரித் திருத்தச் சட்டம் என்பனவற்றுக்கு அமைச்சரவையின் அனுமதியும் கிடைத்துள்ளதாகவும் நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சட்டங்களுக்கான சகல திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டு அந்த வரைபுகள் அமைச்சரவை அனுமதிக்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

சுற்றுலா தொழில் துறையை வலுப்படுத்தும் நோக்கில் சுற்றுலா சபையில் பதிவு செய்யப்பட்ட ஹோட்டல்கள், சுற்றுலாவிடுதிகள், சிற்றுண்டிச்சாலைகள் போன்றவற்றுக்கு உள்நாட்டு வங்கியொன்றின் ஊடாக வெளிநாட்டிலிருந்து நிதி கிடைக்குமாக இருந்தால் அந்த தொகைக்கு தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீடு நீக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு நோக்கங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் கப்பல்கள் மற்றும் படகுகளுக்கும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீடு செய்யப்படமாட்டாது.

கட்டுமானப் பணிகளில் ஈடுப்படும் உப ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படும் தேசத்தை கட்டியெழுப்பும் வரிச் சலுகை பிரதான ஒப்பந்தக்காரர்களுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதற்கு மேலதிகமாக பட்டை தீட்டப்படாத இரத்தினக்கல் இறக்குமதிக்கான வரியும் நீக்கப்பட்டுள்ளதோடு சுத்திகரிக்கப்படாத பாம் எண்ணெயைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தேசிய உற்பத்திகளுக்கும் வரி விலக்கு அளிக்கப்படும். 

கூட்டுரிமை வீடுகள் வழங்கும் போது விதிக்கப்பட்டிருந்த பெறுமதி சேர் வரியில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி 25 மில்லியன் ரூபாவிற்கு குறைந்த பெறுமதியுடைய வீட்டுத் திட்டங்களுக்கு பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது. பெறுமதி சேர் வரி திருத்தம் அமுல்படுத்தப்படுவதற்கு முன்னதாக நொத்தாரிசு கட்டளைச் சட்டத்தின் கீழ் விற்பனை ஒப்பந்தம் மூலம் எழுதப்பட்டுள்ள அல்லது உள்ளுராட்சி மன்றமொன்றில் இணக்கச் சான்றிதழ் பெற்றுக் கொண்டுள்ள கூட்டுரிமை வீடுகளுக்கும் இந்த பெறுமதி சேர் வரி அறவீடு செய்யப்படாது.

இதற்கு மேலதிகமாக உள்நாட்டில் விளைவிக்கப்படும் சிவப்பு பச்சை அரிசியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் தவிட்டு எண்ணெய்க்கு வரி அறவிடப்பட மாட்டாது. 2019 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையின் பிரகாரம் ஏற்றுமதியை நோக்கமாகக் கொண்டு முதலீட்டுச் சபை நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் ஆடைகளுக்கு அலகு ஒன்றுக்கு அறவீடு செய்யப்படும் 75 ரூபா பெறுமதி சேர் வரி 100 ரூபாவாக உயர்த்தப்படும்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11