(இராஜதுரை ஹஷான்)

இஸ்லாமிய அடிப்படைவாத குண்டுத்தாக்குதலை தொடர்ந்து பள்ளிவாசல்களில் இருந்து பாதுகாப்பு தரப்பினரால் கைப்பற்றப்பட்ட வாள் உட்பட ஆயுதங்களை  மீள உரிமையாளர்களிடமே ஒப்படைப்பது சட்டத்திற்கு முரணானது என்பதுடன் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலானது என ஹோமல்பே சோபித தேரர் தெரிவித்தார்.

ஏப்ரல் 21 திகதி குண்டுத்தாக்குதல் ஒன்றும் நாட்டில் பயங்கரவாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் என்று ஒருபோதும் கருத முடியாது. தொடர்ந்து தாக்குதலை  பல்வேறு  வழிமுறைகளில் முன்னெடுப்பதற்கான உரிய  உபாயங்கள்  திட்டமிடப்பட்டுள்ளன.

ஆகவே ஏப்ரல் 21  தின  குண்டுத்தாக்குதல் ஒன்றும் பயங்கரவாதிகளின் இறுதி தாக்குதல் அல்ல என்றும் கூறினார்.