( எம்.எம்.சில்வெஸ்டர்)

6 அணிகள் பங்கொண்ட 14 ஆவது மேற்காசிய பேஸ்போல் தொடரின் இறுதிப் போட்டியில்  இலங்கை அணி பாகிஸ்தானை  வீழ்த்தி இரண்டாவது தடவையாக சம்பியனானது. மேற்காசிய பேஸ்போல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற இலங்கை அணியினர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை கொழும்பு 7 இல் அமைந்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சில் இன்று காலை சந்தித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய பேஸ்பேல் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியினருக்கு தனது அமைச்சின் ஊடாக உதவிகளை செய்து தருவதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உறுதியளித்ததாக இலங்கை பேஸ்போல் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியன்த்த ஏக்கநாயக்க ‘வீரகேசரி இணையத்தளத்துக்கு’ தெரிவித்தார்.