"யுத்தத்தின் பின்னரான இன நல்லிணக்கத்தில் சுஷ்மா சுவராஜின் வகிபாகம் இன்று வரை உணரப்படுகிறது"

Published By: Vishnu

07 Aug, 2019 | 04:32 PM
image

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு சுஷ்மா சுவராஜின் வகிபாகம் இன்று வரை உணரப்படுகிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மறைவு குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

இந்தியா அரசாங்கத்தின் முன்னாள் வெளிநாட்டு அமைச்சரும் பாரதீய ஜனதா கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜின் மறைவு கவலையளிப்பதுடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுப்பாலமாக திகழ்ந்த இவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. 

சுஷ்மா சுவராஜ் எதிர்க்கட்சியில் இருந்தபோது, இலங்கை வந்திருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அப்போதைய அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான இணக்கப்பாட்டு முயற்சிக்கு ஏற்பாட்டாளராக செயற்படுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

மிகவும் புத்துசாதுரியமாகவும் ராஜதந்திரத்துடனும் விடயங்களை கையாள்வதில் சிறந்து விளங்கியவர். 

யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்துக்கு அவரது வகிபாகம் இன்றுவரை உணரப்படுகிறது. வழக்கறிஞரான இவர் மாநில அரசிலிருந்து மத்திய அரசுவரை முன்னேறி ஒளிபரப்பு, குடும்பநலம், வெளியுறவு ஆகிய பல்வேறு துறைகளில் பங்களிப்புச் செய்துள்ளார் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37