(எம்.மனோசித்ரா)

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள சுற்றுலா நிறுவனங்களுக்கு சுற்றுலா அபிவிருத்தி வரி செலுத்துவதற்கான கால அவகாசத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

அதன்படி இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் 6 மாத காலத்திற்காக இந்த வரியை செலுத்துவதற்காக கால அவகாசம் வழங்குவதற்கும், இந்த வரி நிதிக்கு சமமான தவணையை 12 தவணை மூலம் மீண்டும் அறவிடுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.