அஜித்தின் படத்திற்கு தற்காலிக பெயர் ‘AK60’

Published By: Daya

07 Aug, 2019 | 04:25 PM
image

‘ தல ’அஜித் நடிப்பில் தயாராகவிருக்கும் ‘AK60’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தின் ஆரம்ப விழா இம்மாதம் 29ஆம் திகதியன்று நடைபெறவிருப்பதாக படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தெரிவித்திருக்கிறார்.

‘தல’ அஜித் நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை பற்றிய விமர்சனங்கள், நேர்மறையானதாக வெளியாகி கொண்டிருப்பதால், அப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

படத்தை பார்த்த சிலர், ‘சில காலம் முன் தமிழ் திரை உலகில் பரபரப்பாக பேசப்பட்ட ‘மீடு’ இயக்கத்திற்கு ‘தல’ அஜித் ஆதரவாக இருக்கிறார் என்பதை, இப்படத்தை விரும்பி அவர் ரீமேக் செய்த தருணத்திலேயே தெரிந்துவிடுகிறது.

 இதுவே இந்தப் படத்தின் பலமும், பலவீனமும் என்கிறார்கள். இந்தப்படத்தின் குடும்பத்தின் மேன்மைக்காக உழைக்கும் ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட பெண்கள் எதிர்பார்க்கும் சில சமூக உரிமைகள் பற்றிய விடயங்கள் விவாதிக்கப்பட வேண்டும் என அஜித் கூறும் விதிமுறைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் விமர்சனம் செய்கிறார்கள். எனவே இந்த படம் விமர்சன ரீதியில் பரபரப்பாக பேசப்படுவதால் படத்தின் வெற்றி உறுதி என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

‘நேர்கொண்ட பார்வை ’படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் தயாராகவிருக்கும்‘AK60’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். படத்தில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர் நடிகைகளை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் திரையுலகில் அறிமுகமாகி 27ஆண்டுகளை வெற்றிக்கரமாக நிறைவு செய்திருக்கும் ‘தல’அஜித், இம்மாத்ம் 29 ஆம் திகதியன்று ‘AK60’ அறுபதாவது படத்தின் ஆரம்ப விழாவைத் தொடர்ந்து தமிழ் திரையுலகில் பணியாற்றி நூறு படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களைப் போல நாமும் பிரார்த்திப்போம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்