காட்டெருமை தொடர்பில் ஒபாமாவின் அறிவிப்பு

Published By: Raam

11 May, 2016 | 09:03 AM
image

அமெரிக்காவின் தேசிய விலங்காக காட்டெருமையை ஜனாதிபதி பாராக் ஒபாமாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் காட்டெருமைகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிற காரணத்தினால் அவ்விலங்கினத்தை தேசிய விலங்காக பிரகடனம் படுத்தியுள்ளார்.

மேலும், காட்டெருமை இனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 200 ஆண்டுகளுக்கு முன் மிஸ்ஸிஸிப்பி மாநிலம் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இலட்சக்கணக்கில் இருந்த காட்டெருமை தற்போது பெருமளவில் குறைந்து விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெரும்பாலும் வேட்டையாடப்படுவதனாலேயே காட்டெருமைகள் இனம் அங்கு குறைந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

எனவே, காட்டெருமையின் பாரம்பரியம், அவற்றினால் கிடைக்கும் பொருளாதாரம் போன்றவை குறித்து அதிக கவனம் செலுத்த அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, எல்லோஸ்டோன் என்ற பூங்காவில் காட்டெருமைகளின் எண்ணிக்கையை 3000 ஆக உயர்த்தவும் அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47