(செ.தேன்மொழி)

தங்க சங்கிலியொன்றை கொள்ளையிட்டு அடகு வைக்க முற்பட்ட போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் காலி - எத்திலிகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

எத்திலிகொட பகுதியில் திங்கட்கிழமை வீடொன்றில் 5 இலட்சத்து 80 ஆயிராம் பெறுமதியான தங்க சங்கிலியொன்று காணாமல் போயுள்ளதாக காலி பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸாரின் தொடர் விசாரணையின் போது காணாமல் போனதாக குறிப்பிடப்படும் தங்க சங்கிலி அடகு வைக்கபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

அதற்கமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் செவ்வாய்க்கிழமை குறித்த தங்க சங்கிலியை அடகு வைத்ததாக குறிப்பிடப்படும் சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

காலியை சேர்ந்த 32 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.