மயூரன்

யாழ். இளவாலை பிரதேசத்தில் சில நிமிடம்  சூறாவளியுடன் கூடிய மழை பெய்தமையால் இளவாலை கன்னியர் மடம், புனித சென்.ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளன. 

இளவாலை பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை பகல் ஏற்பட்ட இந்த அனர்த்தத்தின் போது கட்டடங்களின் கூரைகள் மாத்திரமே சேதமடைந்துள்ளன. உயிர் சேதமோ காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லை.