(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

துறைமுக கடற்பரப்பில் படகொன்று அனர்த்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக கடற்படையினருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து , குறித்த படகை மீட்கச் சென்ற போதே இவ்வாறு 13 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளர். 

கடற்படையினர் கொழும்பு துறைமுக பொலிஸாருடன் இணைந்து நேற்றைய தினம் குறித்த மீனவர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து 3 மீன்பிடிப்படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  மீட்கப்பட்ட படகுகள்  கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.