சீனாவில் இடம்பெற்ற 53 ஆவது ஆசிய ஆணழகர் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவம் செய்து போட்டிகளில் பங்குபற்றிய புசல்லாவைப் பகுதியைச் சேர்ந்த மாதவன் ராஜ்குமார் மூன்றாம் இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கம் வென்றமை அனைவரும் அறிந்ததே.
சீனாவின் ஹேர்பின் நகரில் கடந்த 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடைபெற்ற இப்போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆண்களுக்கான 60 கிலோ எடைப் பிரிவிலும், 23 வயதுக்குட்பட்ட கனிஷ்ட சம்பியன்ஷிப் போட்டிப் பிரிவிலும் களமிறங்கிய ராஜ்குமார், பலத்த போட்டிக்கு மத்தியில் மூன்றாவது இடத்தைப் பெற்று இலங்கைக்கான முதலாவது பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்தார். இப்போட்டியில் 30 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் வெற்றி பதக்கத்துடன் நாடு திரும்பிய ராஜ்குமாருக்கு விமான நிலையத்திலோ அல்லது விளையாட்டு அமைச்சிலோ உரிய வரவேற்பு வழங்கப்படவில்லை என விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டுமன்றி விளையாட்டு அமைச்சில் அவருக்கு சாதாரண ஒரு தேநீர் கோப்பையை பரிசளித்தமை தமிழ் மக்களிடையே கடும் விசனங்ளகள் எழுந்திருந்தபோதிலும், அது முற்றிலும் முரணானது எனவும், இங்கு இன மத பேதங்கள் பார்ப்பக்கபடவில்லையென்பதற்கு சான்றாக அண்மையில், மாதவன் ராஜகுமாருக்கு பணப்பரிசு வழங்குவற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கும் மலையகத்திற்கும் பெருமை சேர்த்த மாதவன் ராஜ்குமார் மற்றும் சன்முகேஸ்வரன் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று (06.08.2019) மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறுள்ளது. இதில், மிஸ்டர் மலையகம் (Mr. Malaiyagam) சன்முகேஸ்வரன் ஹோர்ஸ் ஒப் மலையகம் (Horse of Malaiyagam) என பெயர் சூட்டி கௌரவிக்கப்பட்டதோடு அவர்களுக்கான 7 பேர்ச் காணியில் 10 லட்ச ரூபா பெறுமதியான வீட்டினை நிர்மாணிப்பதற்கான உத்தியோகபூர்வ கடிதங்களை அமைச்சர் பழனி திகாம்பரம் வழங்கி வைத்துள்ளார். அத்தோடு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா அவர்களால் ராஜ்குமாரிற்கு நினைவு பரிசொன்றையும் வழங்கி வைத்துள்ளார் என்பதுவும் குறிப்பிடதக்கது.
இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.திலகராஜா, மத்திய மாகாணசபை முன்னாள் உறுப்பினர்களான சோ ஸ்ரீதரன், ராம், சரஸ்வதி சிவகுரு அமைச்சரின் இணைப்பு செயலாளர் ஜி.நகுலேஸ்வன் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM