(இராஜதுரை ஹஷான்)

தேர்தல் கால  கூட்டணிகள்  நாட்டு மக்களை ஏமாற்றும் விதமாக அமைய கூடாது. மாறாக   நாட்டினதும் , மக்களினதும்  எதிர்கால நலன்களை கருத்திற் கொண்டு அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என   பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின்  சம்மேளனத்தில் கலந்துக் கொள்வது  கட்சியின் கொள்கைகக்கு முரணானது ஆகையால்  கலந்துக் கொள்ளவில்லை என  குறிப்பிடும்   சுதந்திர கட்சியின்  தலைவர் உட்பட உறுப்பினர்கள்  ஐக்கிய தேசிய கட்சியின்  சம்மேளன  கூட்டத்தில் மாத்திரம் கலந்துக் கொண்டமை  எவ்விதத்தில் நியாயமாகும் என கேள்வியெழுப்பினார்.

பொதுஜன பெரமுனவுடன்  இணைந்து செயற்படும் நோக்கம்  சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு கிடையாது.

மாறாக  மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன்  இணையும்  சாத்தியக்கூறுகளே ஒரு தரப்பினர்களின்  நடவடிக்கைகளின் ஊடாக  அறிய முடிகின்றது. 

எதிர்கால அரசியல் தேவைகளையும், முன்பகைகளையும் மாத்திரம் கருத்திற் கொண்டு  செயற்படுவது  அனைத்து தரப்பினருக்கும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என அவர்  இதன்போது தெரிவித்தார்.