முன்னாள் கொழும்பு பிரதான நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ஆனந்த சமரசேகரவுக்கு எதிராக சட்டமா அதிபர், கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றச்சாட்டுக்களை தாக்கல் செய்துள்ளார்.

றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் விவகாரத்தில், கொலையின் பின்னர் மேலதிக ஆய்வுக்காக எடுக்கப்ப்ட்ட வஸீமின் உடற் பகங்கள் சில காணாமல் போனமை தொடர்பில் சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைக்கு அமைவாக இந்த குற்றப் பத்திரிகை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில்  தாக்கல் செய்யப்பட்டதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார். 

பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஒருவருக்கு எதிராக மேல் நீதிமொன்றில் குற்றவியல் வழக்கொன்று தொடுக்கப்படுகின்றமை இதுவே முதல் முறை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.