ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா கம்போடியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டுள்ளார்.

ஜனாதிபதியும் , அவரது தூதுக்குழுவும்  கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து  இன்று (07.08.2019) அதிகாலை 12 மணியளவில் மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் MH-178 மூலம் கம்போடியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவரது குழுவினரும் நான்கு நாட்கள் பயணமாக கம்போடியாவுக்கு விஜயம் செய்யதுள்ளமை குறிப்பிடத்தக்கது.