பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் வகையிலான ஏ.சி.யை. சோனி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ரியோன் பாக்கெட் ஏ.சி. என்ற பெயரில் இது வெளிவந்துள்ளது. இதை புளூடூத் 5.0 மூலம் இணைத்து செயல்படுத்தலாம். தெர்மோ எலெக்ட்ரிக் அடிப்படையில் இது குளிர்ச்சியை அளிக்கும். 

ரியோன் பக்கெட் ஏ.சி. கருவியானது ரீசார்ஜ் செய்யக்கூடிய மின்கலத்தில் செயற்படுகிறது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தல் 24 மணி நேரம் செயற்படும். 

இந்த ஏ.சி. சாததம் 85 கிராம் எடையுடையது. அதாவது வழக்கமாக பயன்படுத்தும் ஸ்மார்ட் தொலைபேசிகளின் எடையை விடவும் குறைவானது. 

இந்த கருவியானது ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ரோய்ட் இயங்குதளங்களில் செயற்படக்கூடியது. இதற்குரிய செயலி மூலம் இந்த கருவியை செயல்படுத்தலாம். இது ரியோன் பாக்கெட் ஸ்டாண்ட் மற்றும் ரியோன் பாக்கெட் லைட் என்ற இரண்டு வடிவங்களில் வந்துள்ளது.

இதில் பாக்கெட் லைட் விலை குறைவானது. அதனால் இதை மனுவலாகதான் செயறப்படுத்த முடியும். மற்றைய வடிவம் பாக்கெட் ஸ்டாண்டுடன் ஸ்மார்ட்போன் மூலமும் மனுவலாகவும் செயல்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுளளது.