சிங்கப்பூருக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 4.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்ரீலங்கா விமானச் சேவைக்கு சொந்தமான  யூஎல்303 என்ற விமானத்தில் வருகை தந்த பிரதமர், விமான நிலையத்திலிருந்து விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கொழும்பை வந்தடையவுள்ளார்.