(செ.தேன்மொழி)

வெல்லம்பட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப் பதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் ருவன் குணசேகர தெரிவித்தார்.

வெலம்பட முஸ்லிம் பள்ளியிலிருந்து மீட்கப்பட்டிருந்த கத்திகள் மற்றும் கோடரி என்பவற்றை அனுமதியின்றி மீண்டும் குறித்த பள்ளிவாசலிடம் கையளிக்க முற்பட்ட வெலம்பட பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப் பதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பள்ளியிலிருந்து 76 கத்திகளும் இ 13 கை கோடரிகளும் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தன. 

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கண்டி பொலிஸ் நிலையத்திற்கு உடன் இடமாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பணியிலிருந்தும் இடை நிறுத்தப்பட்டுள்ளார். 

அத்தோடு குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பணியிடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகள் கண்டி பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.