வெள்ளவத்தை பகுதியில் இயங்கிய மசாஜ் நிலையத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது விபசாரம் புரிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணை நாடு கடத்துமாறு கல்கிஸ்ஸ நீதவான் மொஹமட் சஹாப்தீன் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பெண் நாடு கடத்தப்படும் வரை மிரிஹான பொலிஸ் முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட வேண்டும் என நீதவான் மேலும், தெரிவித்துள்ளார்.

குறித்த தாய்லாந்துப் பெண்ணுக்கு எயிட்ஸ் தொற்று இருப்பதாக வைத்திய அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் வெள்ளவத்தைப் பொலிஸார் மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பில் இலங்கைப் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், குறித்த மசாஜ் நிறுவனத்தின் உரிமையாளரிடமும், கட்டிடத்தின் உரிமையாளரிடமும் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.