நாடக நடிகரான வை. ஜி மகேந்திரனின் தாயார் திருமதி. ராஜலட்சுமி பார்த்தசாரதி மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.

நாடக நடிகரும்,திரைப்படநடிகருமான வை.ஜி மகேந்திரனின் தாயாரான திருமதி ராஜலட்சுமி பார்த்தசாரதி( வயது 93) திடிரென்று ஏற்பட்ட இதய செயலிழப்பு காரணமாக, சென்னையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை 3.30 மணியளவில் உயிரிழந்தார்.

சென்னையிலுள்ள பத்மா சேஷாத்ரிகல்வி குழுமம் மற்றும் பாரத் கலாச்சார் என்ற கலை இலக்கிய மன்றம் ஆகியவற்றில் தலைமைப் பொறுப்பை வகித்தவர். கல்வி மற்றும் கலைக்காக இவர் ஆற்றிய சேவைக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது.

இவரது மறைவு செய்தி கேட்டு திரையுலக மற்றும் நாடக உலகைச் சேர்ந்த பலர் அவரது பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

நாளை மாலை நான்கு மணியளவில் சென்னையிலுள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் அவரது இறுதி சடங்கு நிகழ்வுகள் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.