அமெரிக்கா - தென்கொரியா கூட்டு இராணுவ பயிற்சிக்கு பதிலடி கொடுத்த வடகொரியா

Published By: Vishnu

06 Aug, 2019 | 04:08 PM
image

அமெரிக்கா - தென்கொரியா மேற்கொண்ட கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா இன்று அடையாளம் தெரியாத இரு ஏவுகணைகளை ஏவி சோதனை செய்துள்ளது.

இரு வாரங்களில் வட கொரியா நான்காவது முறையாக இவ்வாறு செய்துள்ளது என தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

தென் ஹ்வாங்ஹே மாகாணத்தில் இருந்து, கிழக்கில் உள்ள கடல் பகுதிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் தென் கொரியா மேற்கொண்ட கூட்டு ராணுவப் பயிற்சி குறித்த தனது அதிருப்தியை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது வட கொரியா.

இந்த வருடாந்திர கூட்டு ராணுவ பயிற்சிகள் ஆடம்பரமாக நடைபெறவில்லை. எனினும், இது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தென் கொரிய ஜனாதிபதி மூன் ஜே-இன் ஆகியோருடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மீறுவதாக அமைந்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமெரிக்கா, நாங்கள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதுடன்,தென் கொரிய மற்றும் ஜப்பானிய நட்பு நாடுகளுடன் நெருக்கமாக ஆலோசித்து வருகவும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17