புளோரிடாவின் வொலூசியா கவுண்டியில் உள்ள புதிய சிமிர்னா கடற்கரையில் கடந்த வார இறுதி இரண்டு நாட்களில் மூன்று பேர் சுறாக்களின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். 

கடந்த சனிக்கிழமை அன்று 20  வயதுடைய பெண் ஒருவரை இடது கை மற்றும் மணிக்கட்டில் சுறா கடித்து காயங்களுக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்த பெண் உயிருக்கு  ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  சிகிச்சையளிக்கபட்டு வருகின்றார்.

அரைமணிநேரம் கழித்து மற்றொரு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் வலது காலில் கடிக்கப்பட்டு சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளான். 

அவரை தொடர்ந்து  50 வயதுடைய நபர் ஒருவரை  ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் சுறாவொன்று வலது காலைக் கடித்துள்ளது.

தாக்குதல்களை மேற்கொள்ளும் சுறாக்களின் அடையாளங்கள் உடனடியாக கண்டுப்பிடிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட சுறா அல்லது சுறாக்களின் வகையும் அறியப்படவில்லை.

புளோரிடா சர்வதேச சுறா தாக்குதல் பல்கலைக்கழகத்தின் தகவலின்படி குறித்த கடற்கரை பகுதியில்  இந்த ஆண்டில் 17 சுறாக்கள் மனிதர்களை தாக்கியுள்ளதாக  கூறப்படுகிறது.