ரயில் முன் பாய்ந்து 41 வயதுடைய பெண்ணொருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொஹோந்தரமுல்ல  பாடசாலைக்கருகில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருதானையில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த புகையிரதத்திற்கு முன் பாய்ந்தே குறித்த பெண் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மெற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.