கல்லீரல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு மேம்பட வேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அண்மைக்காலமாக கல்லீரல் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருக்கிறது. உடலுக்குள் இயங்கிக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று என்று தான் பலரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது எம்முடைய உடலை காக்கும் பாதுகாவலன் என்பதை யாரும் உணர்வதில்லை. நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்களையும், நச்சுக்களையும் தனித்தனியே பிரித்தெடுத்து, உடலுக்கு தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு, மற்றதை வெளியேற்றும் பணியை கல்லீரல் இடைவெளியில்லாமல் செய்து வருகிறது. இத்தகைய சிறப்புமிக்க உறுப்பை பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு சமூகத்தில் இன்றும் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும்.
ஹெபடைடிஸ் எனப்படும் கல்லீரல் அழற்சி நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் மக்கள் ஹெபடைடீஸ் பி மற்றும் சி வகையினதான நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்காசியாவில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இந் நோயின் தாக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது.
ஏற்கெனவே பயன்படுத்திய ஊசிகளை மீண்டும் உபயோகிப்பதால் இரத்தம் மூலமாகவும், பாதுகாப்பற்ற உடலுறவு மூலமாகவும், பி மற்றும் சி வகை கல்லீரல் அழற்சி நோய்கள் ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற உணவு மற்றும் தரமற்ற குடிநீர் மூலமாக ஹெபடைடீஸ் ஏ மற்றும் இ வகையினதான நோய்கள் பரவுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, துப்புரவான சூழலை கடைப்பிடித்தால் இந்த வகை நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM