குழப்பம் விளைவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் முதல் பலருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய நாட்டிலேதான் விஸ்வமடு பகுதியில் புரட்சிப் பாடல்களை வைத்திருந்தவர்கள் என்று கைது செய்தவர்களுக்கு விசாரணை கூட இல்லாமல் இருப்பதாக கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஜீவராசா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இந்த வருடம் 14.01.2019 அன்று தொலைபேசிக்கு விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களை ஏற்றிக் கொடுத்த குற்றசாட்டில் உரிமையாளரான கடை கந்தசாமி அரிகரன் என்ற இளைஞனையும் பாடல் வைத்திருந்ததாக தெரிவித்து தவபாலசிங்கம் குணசீலன் என்பவரையும் தர்மபுரம் பொலிஸார் கைது அன்றைய தினமே கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
ஆனால் இன்று கிட்டத்தட்ட ஏழு மாதங்களை தொடுகின்ற போதும் விசாரணைகள் கூட இதுவரை நடைபெறவில்லை பதின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை கிளிநொச்சி நீதாவான் நீதிமன்றுக்கு அழைத்து செல்கிறார்கள் எவ்வித முன்னேற்றமும் இல்லை
தமிழர்கள் என்ன குற்றம் செய்தாலும் அது பயங்கரவாதம் பயங்கரவாத சட்டத்தின் கீழ் வழக்கு தொடர வேண்டியது அதே சிங்களவர்கள் செய்தால் கைது செய்து மறுகணமே பொது மன்னிப்பில் வெளியில் விட வேண்டியது விடுதலைப் புலிகளின் புரட்சிப் பாடலை வைத்திருந்தது ஒரு தவறா இவை தேவையான அளவு இணையங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உள்ளனவே பின்னர் எப்படி இது தவறாகும்
அதனை விட இந்த இருவரது குடும்பங்களையும் நன்கு தெரிந்தவன் பழகியவன் என்ற வகையில் அவர்கள் இவர்கள் இல்லாது எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுகிறார்கள் எவ்வளவு மன அழுத்தங்களுக்கு முகம்கொடுகிறார்கள் என்பதனை அறிந்தவன் என்ற வகையில் கூறுகின்றேன் இவர்களுக்கு கைகொடுக்க சட்ட வல்லுனர்கள் முன்வர வேண்டும்.
அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய நான் தயாராக உள்ளேன் அத்துடன் அப்பாவி இளைஞர் பொய்யான குற்ற சாட்டில் கைது செய்வதனை பொலிஸார் நிறுத்த வேண்டும் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் மீண்டும் துன்புறுத்துவதனை நிறுத்தவேண்டும் இதனை சம்பந்த பட்ட அதிகாரிகளும் பொலிஸாரும் விளங்கிக்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM