தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.

36 வயதான ஸ்டெயின் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையிலேயே இந்த அறிவிப்பினை அவர் விடுத்துள்ளார்.

2004 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடனான போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் அறிமுகமான ஸ்டெயின் இதுவரை 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 439 விக்கெட்டுக்களை சாய்த்துள்ளார். 

அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் 7 ஆவது இடத்தில் உள்ளதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 26 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.