(எம்.மனோ­சித்ரா)

தனிக்­கட்­சி­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­வதில் உள்ள கடின தன்­மை­யினை கடந்த கால அர­சியல் குறித்து அவ­தா­னத்தில் கொள்ளும் போது அனை­வ­ராலும் உண­ர­மு­டியும். எனவே தான் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து வெற்­றிப்­பெற கூடிய வகையில் அதனை வலுப்­ப­டுத்தும் பணி­களில்  முழு அளவில் ஈடு­பட்­டுள்ளோம். 

இந்த இலக்­கி­லி­ருந்து நானோ எனது பங்­காளி கட்­சி­களின் தலை­வர்­களோ விலக போவ­தில்லை. ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­லான கூட்­ட­ணி­யுடன் ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றிக்­கொள்­வதே எமது ஒரே இலக்­காகும்  என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் தலை­மைத்­து­வத்­தி­லான கூட்­ட­ணி­யுடன் ஜனா­தி­பதி தேர்­தலை வெற்­றிக்­கொள்­வதே எமது ஒரே இலக்­காகும். அதன் பின்னர் பொதுத் தேர்­த­லிலும் வெற்­றி­ய­டைந்து ஸ்தீர­மான அர­சாங்­கத்தை ஸ்தாபித்து  நாட்டை முன்­னோக்கிக் கொண்டு செல்வோம் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று திங்­கட்­கி­ழமை வெளி­யிட்­டுள்ள விஷேட அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது :

2014 ஆம் ஆண்டு நாம் நாட்­டுக்­காக ஒன்­றி­ணைந்தோம். ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்தல், இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை பலப்­ப­டுத்தல் , வீழ்ச்­சி­ய­டைந்­தி­ருந்த பொரு­ள­தா­ரத்தை மீள் கட்­டி­யெ­ழுப்­புதல் மற்றும் நல்­லாட்­சியை இலக்­காகக் கொண்டு அர­சியல் கட்­சிகள் , பல அமைப்­புக்­க­ளுடன் இணைந்து கூட்­ட­ணி­ய­மைத்தோம்.

கடந்த காலத்தில் நாட்டில் ஏற்­பட்ட ஆரோக்­கி­ய­மான முன்­னேற்­றங்கள் குறித்து நாம் கவனம் செலுத்­தினோம். அர­சி­ய­ல­மைப்பு சூழ்ச்­சி­யினால் நாட்டில் ஏற்­பட்ட ஸ்திர­மற்ற தன்மை குறித்தும் கவனம் செலுத்­தினோம்.எனவே இந்த கார­ணி­களால் மேலும் பரந்­துப்­பட்ட கூட்­ட­ணி­யொன்றை மீண்டும் அமைப்­ப­தற்­கான தேவை உண­ரப்­பட்­டது.

நாட்டின் பாது­காப்பு மற்றும் நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வதை இலக்­காகக் கொண்ட அர­சியல் கட்­சிகள் மற்றும் அமைப்­புக்­க­ளுடன் ஆழ­மான பேச்­சு­வா­ரத்­தை­களை முன்­னெ­டுத்தோம். இதன் பிர­காரம் ' புதிய நாடு - நவீன சமூகம் ' என்ற இலக்கை நோக்கி ' ஜன­நா­யக தேசிய முன்­னணி ' என்ற பெயரில் பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைத்து அதனை அர­சியல் அமைப்­பொன்­றாக பதிவு செய்­யவும் தீர்­மா­னித்தோம். அனைத்து தரப்­பு­க­ளு­டனும் பேச்­சுக்­களை நடத்­திய பின்னர் ஜன­நா­யக ரீதியில் இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

ஆகஸ்ட்­டுக்குள் கூட்­டணி

இந்­நி­லையில் ஜன­நா­யக தேசிய முன்­ன­ணியை ஸ்தாபிக்கும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டதன் பின்னர் இடம்­பெற்ற இறுதி கலந்­து­ரை­யா­டலில் புதிய யோச­னைகள் பல முன்­வைக்­கப்­பட்­டன. அந்த யோச­னை­களை உள்­வாங்­கப்­பட வேண்­டி­யதன் அவ­சி­யத்தை உணர்ந்தோம். எனவே கூட்­ட­ணிக்­கான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தத்தை கைச்­சாத்­திட கால அவ­காசம் தேவை என்­பதை கவ­னத்தில் கொண்டோம். எவ்­வா­றா­யினும் ஆகஸ்ட் இறு­திக்குள் கூட்­ட­ணியை ஸ்தாபிக்க தீர்­மா­னித்­துள்ளோம்.

ஜன­நா­யக தேசிய முன்­னணி ஸ்தாபிக்­கப்­பட்­டதன் பின்னர் அர­சியல் கட்­சிகள் மற்றும் அமைப்­புக்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான தேவை அதி­க­மா­கவே காணப்­ப­டு­கின்­றது. ஆனால் எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பங்­காளி கட்­சி­களின் அன்­றாட அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்கு தடைகள் ஏற்­ப­டாது. கட்­சி­களின் உள்­ளக விட­யங்­க­ளுக்கு தலை­யீ­டுகள் மற்றும் பாதிப்­புகள் ஏற்­ப­டாது.

கட்­சி­களின் தனித்­துவம் மற்றும் சுயா­தீன தன்­மைகள் பாது­காக்­கப்­பட்ட வகை­யி­லேயே கூட்­டணி உரு­வாக்­கப்­படும். ஜன­நா­யக தேசிய முன்­ன­ணிக்­காக கொள்கை திட்­டத்தை உரு­வாக்­குவோம். இதனை அடிப்­ப­டை­யாக கொண்டே எதிர்­கால நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­படும்.

தனிக்­கட்­சி­யாக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட்டு வெற்றி பெறு­வதில் உள்ள கடின தன்­மை­யினை கடந்த கால அர­சியல் குறித்து அவ­தா­னத்தில் கொள்ளும் போது அனை­வ­ராலும் உணர கூடிய விட­ய­மாகும். எனவே தான் பரந்­துப்­பட்ட கூட்­ட­ணியை அமைத்து வெற்­றிப்­பெற கூடிய வகையில் அதனை வலுப்­ப­டுத்தும் பணி­களில் முழு அளவில் ஈடுப்­பட்டேன். இந்த இலக்கிலிருந்து நானும் எனது பங்காளி கட்சிகளின் தலைவர்களும் விலக போவதில்லை.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்திலான கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தலை வெற்றிக்கொள்வதே எமது ஒரே இலக்காகும். அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் வெற்றியடைந்து ஸ்தீரமான அரசாங்கத்தை ஸ்தாபித்து  நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வோம்.

இதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம். உலகில் அபிவிருத்தியடைந்த நாடாக இலங்கையை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

--