இந்தியாவின் உத்தரகாண்ட் பகுதியில் பாடசாலை மாணவர்கள‍ை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உத்தரகாண்டின் தெஹ்ரி கார்வால் பகுதியில் கங்சாலி என்ற இடத்தில் 18 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து இவ்வாறு பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் பயணித்த 7 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில் ஏனையவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.