(செ.தேன்மொழி)

நீர்கொழும்பு - கட்டுவாப்பிட்டி பகுதியில் மாதா சிலைக்கு கல் எறியப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவ இடத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பதற்ற நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.