(செ.தேன்­மொழி)

வெள்­ள­வத்தை பகு­தியில் இரு­கு­ழுக்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட மோதலில் உப பொலிஸ் பரி­சோ­தகர் உட்­பட 9 பேர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். சம்­பவம் தொடர்பில்  ஐவர் கைது செய்­ய­ப்பட்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்தார்.

வெள்­ள­வத்தை - மயூராபதி ஆலயப் பகு­தியில் நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு 10.45 மணி­ய­ளவில் லக்­முத்து செவன குடியி­ருப்பு தொகு­தியில் வசிக்கும் சில­ருக்கும் , கட்­டிட நிர்­மாண பணியில் ஈடுப்­பட்­டி­ருந்த ஊழி­யர்­க­ளுக்கு இடையில் மோதல்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸா­ருக்கு தகவல் கிடைத்­துள்­ளது. சம்­பவ இடத்­திற்கு விரைந்த பொலிசார் நிலை­மையை கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வர முற்­பட்­டுள்­ளனர். 

எனினும் இரு­த­ரப்­பிற்­கு­மி­டையில் கடும் மோதல் ஏற்­பட்­டுள்­ளது.  மது போதையில் இருந்த சிலரால் மோதல் ஆரம்­பித்­துள்­ள­துடன் பின்னர் 150 க்கும் அதி­க­மானோர் கடு­மை­யாக தாக்­கிக்­கொண்­டுள்­ளனர். இரு தரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான மோதல் எல்­லை­மீறி சென்ற நிலை­யி­லேயே  இவர்­களை கலைக்க கண்­ணீர்­புகை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக பொலிஸ் ஊடக பேச்­சாளர் தெரி­வித்தார். 

இதன் பின்­னரே மோதல்­களில் ஈடுப்­பட்­ட­வர்கள் கலைந்து சென்­றுள்­ளனர். மோதலில் சிக்கி வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்தின் உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர் உட்­பட 9 பேர் காய­ம­டைந்து களு­போ­வில வைத்­தி­ய­சாலை அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.

இந்­நி­லையில் மோத­லினால் 7 முச்­சக்­கர வண்­டி­களும் , கார் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்­கிளும் சேத­ம­டைந்­துள்­ளன. சம்­பவம் தொடர்பில் சந்­தேக நப­ரொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார். ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கொழும்பு குற்றப்பிரிவினரும் வெள்வத்தை பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.