முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க்ஷவை ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சாளர் கபீர் ஹாசிம் மற்றும் முக்­கி­யஸ்தர் சாகல ரட்­னா­யக்க ஆகியோர் நேற்று முன்­தினம் சந்­தித்து பேசி­யுள்­ளனர். இந்த விடயம் குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்­தின்­போ­து­கேள்வி எழுப்­பப்­பட்­டுள்­ளது.

அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க இந்தக் கேள்­வியை எழுப்­பி­யுள்ளார். ஐக்­கிய தேசியக் கட்­சியின் எம்.பி.க்களான கபீர் ஹாசிம் மற்றும் சாகல ரட்­னா­யக்க ஏன் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை சந்­தித்­தனர் என்றும் அதற்­கான நோக்கம் என்ன எனவும் அவர் கேள்வி எழுப்­பி­யுள்ளார்.

இதன்­போது கோத்­தாவின் உடல் நிலை குறித்து சுகம் விசா­ரிக்­கவே இவர்கள் சென்­ற­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அமைச்சர் கபீர் ஹாசிம் தனி­யா­கவும், அமைச்சர் சாகல ரட்­னா­யக்க தனி­யா­கவும் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை சந்­தித்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை நேற்று இரவு அல­ரி­மா­ளி­கையில் நடை­பெற்ற உத்­தேச அமைச்­ச­ரவை கூட்­டத்­தின்­போ­தும்­ இந்த விவ­காரம் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. பிர­த­ம­ரிடம் இது விடயம் குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது, அவர் சிரிப்­பையே பதி­லாக வழங்­கி­யுள்ளார்.