டெஸ்ட் போட்டிகளில் இருந்து  ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினிற்கு டுவிட்டரில் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பாராட்டுகளையும் புகழாரங்களையும் வெளியிட்டு வருகின்றனர்

இந்த தலைமுறையின் மிகப்பெரும் வீரர் என தென்னாபிரிக்க அணித்தலைவர் டு பிளசிஸ் தனது டுவிட்டரில் ஸ்டெயினை பாராட்டியுள்ளார்

புள்ளிவிபரங்கள் பொய் சொல்லாது ஸ்டெயினின் 62 டெஸ்ட் புள்ளிவிபரங்கள் உண்மையை தெரிவிப்பவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எவ்வளவு முக்கியமானதாக கருதினீர்கள் என்பது எனக்கு தெரியும் என குறிப்பிட்டுள்ள அவர் நீங்கள் இன்னமும் எவ்வளவு விடயங்களை சாதிக்க விரும்புகின்றீர்கள் என்பதும் எனக்கு தெரியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டெயின் நிச்சயமாக ஒரு ஜாம்பவான் என தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ள யுவராஜ் சிங் கிரிக்கெட் வீரர்களில் தலைசிறந்தவர் வேகப்பந்து வீச்சாளர்களில்  நிச்சயமாக அவர் மிருகம் என வர்ணித்துள்ளார்.

அந்த அற்புதமான பந்துவீச்சுக்களையும் அந்த ஆக்ரோசத்தையும் ஒருபோதும் மறக்க முடியாது என யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

வேகப்பந்து இயந்திரத்திற்கு மகிழ்;ச்சியான ஓய்வு என விராட்கோலி தெரிவித்துள்ளார்