குடிநீர் போத்தல்களில் ஒட்டப்படுகின்ற பொலிதீன்கள்  தடைசெய்யப்படவுள்ளதாக மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் துறை அமைச்சர்  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதனால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பினை கருத்திற்கொண்டு இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.