கடந்த வாரம் கொலை செய்யப்பட்ட அனுராதபுரம் நொச்சியாகமயை சேர்ந்த சரத் பண்டார எனப்படும் எஸ்.எப்.பண்டார கொலை தொடர்பான முக்கிய ஆதாரம் ஒன்று திரப்பனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

குறித்த விசாரணைக்கு முக்கியமானதாக கருதப்படும் இறுவட்டு ஒன்றே எஸ்.எப்.பண்டாரவின் சகோதரனால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மோட்டர் சைக்கிளில் வந்த இரு நபர்கள், குறித்த இறுவட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு தன்னிடம் கொடுத்ததாக  எஸ்.எப்.பண்டாரவின் சகோதரன் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.