பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பொகவந்தலாவ கியூ கீழ் பிரிவு தோட்டத்தில் சிறுத்தை ஒன்று தாக்கியதில் ஆண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இன்று காலை 9.45 மணியளவில் அப்பகுதியில் உள்ள தேயிலை மலையில் குறித்த ஆண் தொழில் செய்து கொண்டிருந்த போது தேயிலை செடி அடிவாரத்தில் இருந்து சிறுத்தை ஒன்று குறித்த நபரை தாக்கிவிட்டு சென்றுள்ளது.

அதன் பின் அவர் காயங்களுடன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த நபருக்கு எவ்வித உயிராபத்துகளும் இல்லாமல் ஏனைய தொழிலாளர்கள் காப்பாற்றியுள்ளமை குறிப்பிடதக்கது. 

இவ்வாறு காயமடைந்தவர் சிவக்குமார் (35) என தெரியவந்துள்ளது. 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(க.கிஷாந்தன்)