வவுனியா நெடுங்­கேணி சேனைப்­பு­லவு கிரா­மத்­துக்­குள் குடி­கொண்­டி­ருக்­கும் யானைக் கூட்­டத்தை விரட்டி அங்கு வாழும் 300 விவ­சா­யக் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தாரத்­தைக் காக்க அதி­கா­ரி­கள் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என பல­த­ட­வை­கள் கேட்­டும் எந்­தப் பய­னும் கிட்­ட­வில்லை என நெடுங்­கேணி ஒலுமடு கிராம அபிவிருத்தி சங்க தலை­வர் பூபா­ல­சிங்­கம் தெரி­வித்­தார்.

இது தொடர்­பில் அவர் மேலும் தெரிவித்­த­தா­வது,

நெடுங்­கே­ணிப் பகு­தி­யின் நாலா­பு­­றமும் யானை­க­ளின் தொல்லை நாளுக்கு நாள் அதி­க­ரித்­துக்­கொண்டே செல்­கின்­றது. எங்கு முறை­யிட்­டும் பயன் கிட்­ட­வில்லை. நெடுங்­கேணி வைத்தியசாலைககுள் உட்­பு­குந்த யானை மருத்­து­வ­ரை­யும் விரட்­டி­யது. அதற்கு உட­ன­டி­யாக வேலி அமைத்­துத் தரப்­ப­டும் என்று ஊட­கங்­க­ளில் அறிக்கை விட்­ட­னர். ஆனால், இரண்டு ஆண்­டு­கள் கடந்­தும் வேலி அமைக்­கப்­ப­ட­வில்லை. யானை­கள் மாமன், மச்­சான் வீட்­டுக்கு விருந்­துக்கு வரு­வது போன்று தின­மும் வரு­கின்­றன. பெரும்  அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றன. இது­வரை நெடுங்­கே­ணி­யில் 9 வீடு­களை யானை­கள் உடைத்­துள்­ளன.

எந்­த­வொரு வீட்­டுக்­கும் ­இ­ழப்­பீடு கிடை­யாது. 400க்கும் மேற்­பட்ட தென்­னை­கள், ஆயி­ரம் வரை­யான வாழை­கள், 700க்கும் மேற்­பட்ட பப்­பாசி, நெல்­வ­யல்­கள் என கோடி ரூபா பெறு­ம­தி­யான சொத்­துக்­களை நாசம் செய்­து­விட்­டது. இவற்­றுக்­கும் இழப்­பீடு கிடை­யாது.சேனைப்­பு­லவு கிரா­மத்­துக்­குள் உட்­பு­குந்த யானைக் கூட்­டம் தென்­னை­கள், கத்­தரி மட்­டு­மன்றி மாடு­க­ளின் தீவ­னத்­துக்­காக வளர்த்த புற்­க­ளை­யும் விட்­டு­வைக்­க­வில்லை.

அந்த யானைக்கு வெடி கொளுத்­தி­யும் செல்­ல­வில்லை. பெரும் வெளிச்­சம் பாச்­சப்­பட்­டது. அதற்­கும் எந்­தப் பதற்­ற­மும் இன்றி அசை­யாது யானை­கள் நிற்­கின்­றன. விவ­சா­யி­கள் அச்­ச­ம­டை­கின்­ற­னர். குறித்த வெளிச்­சத்­தில் ஓர் யானை­யில் குறி­சுட்ட அடை­யா­ளம் உள்ள­தாக விவ­சா­யி­கள் தெரிவிக்கின்ற­னர். இத­னால் நிச்­ச­ய­மாக வளர்ப்பு யானை­கள் என்­ப­தும் தெளி­வா­கின்­றது. எனவே குறித்த யானைக் கூட்­டத்தை விரட்டி அங்கு வாழும் 300 விவ­சா­யக் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைக்காக்க அதி­கா­ரி­கள் இனி­யா­வது முன்­வ­ரு­வார்­களா எனக் கேள்வி எழுப்­பி­னார்.