ஆஷஸ் முதல் போட்டியில் ஸ்மித்தின் சாதனைகள்

Published By: Vishnu

05 Aug, 2019 | 01:03 PM
image

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வீரர் ஸ்டீபன் ஸ்மித் சில சாதனைகளை புரிந்துள்ளார்.

இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் கடந்த முதலாம் திகதி பேர்மிங்கமில் ஆரம்பமான முதலாவது போட்டியில் ஐந்தாம் நாளான இன்று 398 என்ற வெற்றியிலக்கை நோக்கி இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாடி வருகிறது.

இந் நிலையில் இப் போட்டியில் சில சாதனைகளை ஸ்டீபன் ஸ்மித் பதிவுசெய்துள்ளார் .

அவையாவன :

* போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே ஸ்டீபன் ஸ்மித் 275 ஓட்டங்களை பெற்றுள்ளார் (144|131). இந்த ஓட்ட எண்ணிக்கையே ஸ்மித் டெஸ்ட் போட்டியொன்றில் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாக பதிவாகியுள்ளது.

* ஆஷஸ் டெஸ்ட் போட்டியொன்றில் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய 8 ஆவது வீரர் என்ற பெருமையையும், 5 ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

* ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இவர் பெற்றுக் கொண்ட 10 ஆவது சதம் இது என்பதுடன், அந்த அணிக்கு எதிராக ஆஷஸ் தொடரில் அதிக சதங்கள் அடித்த ஸ்டீவ் வோக்கை ஸமித் சமன் செய்துள்ளார்.

* டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஸ்மித் இந்த இரண்டு சதங்கள் ஊடாக மொத்தம் 25 சதங்களை விளாசியுள்ளார். 119 இன்னிங்சில் இந்த மைல்கல்லை எட்டிய ஸ்டீவன் ஸ்மித் குறைந்த இன்னிங்சில் 25 சதங்கள் அடித்தவர்களின் வரிசையில் 2 ஆவது இடத்தை பிடித்துள்ளார். 

1. Most runs in a Test for Steve Smith: 

275*(144|131*)v Eng, Edgbaston 2019

273 (215|58) v Eng, Lord's 2015

252 (199|54*) v WI, Kingston 2015

239 (239|DNB) v Eng, Perth 2017

214 (162*|52*)v Ind, Adelaide 2014

2. Hundreds in each innings of an Ashes Test

Warren Bardsley (1909)

Herbert Sutcliffe (1925)

Wally Hammond (1929)

Denis Compton (1947)

Arthur Morris (1947)

Steve Waugh (1997)

Matthew Hayden (2002)

STEVE SMITH (2019)

3. Most 100s in Ashes

19 Don Bradman

12 Jack Hobbs

10 Steve Waugh/ Steve Smith *

09 Wally Hammond/ David Gower

4. Fewest innings to 25 Test 100s:

68 Don Bradman

119 STEVE SMITH

127 Virat Kohli

130 Sachin Tendulkar

138 Sunil Gavaskar

139 Matthew Hayden

147 Gary Sobers

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் சிட்டி எவ்.ஏ. கிண்ண சம்பியனானது!

2023-06-04 17:17:41
news-image

இரண்டாவது போட்டியில் இலங்கை 323 ஓட்டங்கள்...

2023-06-04 16:10:20
news-image

ஆசிய கிண்ணப் போட்டிகளை இலங்கை நடத்த...

2023-06-04 11:43:17
news-image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்தவீராங்கனைகள் -கபில் தேவ்...

2023-06-03 13:50:22
news-image

தோனியின் முழங்கால் சத்திர சிகிச்சை வெற்றிகரமாக...

2023-06-03 10:43:52
news-image

ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் பணிந்தது இலங்கை

2023-06-02 20:48:55
news-image

ஆப்கானிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 269 ஓட்டங்கள்...

2023-06-02 14:31:46
news-image

 ஜோகோவிச்சின் கொசோவா தொடர்பான கருத்து ஏற்படுத்திய...

2023-06-02 13:22:32
news-image

ஐ.பி.எல்லில் அசத்திய மதீஷ பத்திரணவை சர்வதேச...

2023-06-02 07:25:11
news-image

மதீஷ பத்திரண குறித்து இலங்கை அணித்...

2023-06-02 12:32:24
news-image

23 வயதுக்குட்பட்ட பொதுநலவாய பளுதூக்கல் சம்பியன்ஷிப்பில்...

2023-06-01 17:19:41
news-image

47ஆவது தேசிய கூடைப்பந்தாட்டம்: இருபாலாரிலும் வட...

2023-06-01 15:51:26