இங்கிலாந்து இளவரசர் ஹரி தனது மனைவி மேகன் மார்க்லேவுக்கு சமூகவலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நேற்று மேர்கன் மார்க்லே 38 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். மேலும் இவரது பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக கணவர் ஹரி இன்ஸ்டாகிராமில் வாழ்த்துக்களை பரிமாறியுள்ளார்.

அதில், அரச  தம்பதிகளாக முதன் முதலில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, பிஜி மற்றும் தொங்கா ஆகிய நாடுகளுக்குச்  சுற்றுப் பயணம் சென்றபோது, எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து, ” எச்ஆர்எச் டச்சஸ் ஓவ் சசெக்ஸிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”  என பதிவு செய்து அதைத் தொடர்ந்து பிறந்தநாள் கேக் ஈமோஜி மற்றும் லவ் எச்  என  இட்டு தம்பதியரின் அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில்  பகிர்ந்திருந்தார்.

பேரனின் வாழ்த்து பதவில் இங்கிலாந்து  இளவரசி  இணைந்து மேகன் மார்க்லேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை அவரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளாமை குறிப்பிடத்தக்கது.