தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களுக்கான புதிய ஆளுனர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

குறித்த பதவியேற்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

அதன்படி ஊவா மாகாண ஆளுனராக மைத்திரி குணரத்னவும், மத்திய மாகாண ஆளுனராக கீர்த்தி தென்னகோனும் மற்றும் தென் மாகாண ஆளுனராக ஹேமல் குணசேகரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.