(இராஜதுரை ஹஷான்)

சட்டவிரோத மதுபான  உற்பத்திகளை ஒழிக்கும் நோக்கில் மதுவரி திணைக்களம் கடந்த 6 மாத காலத்திற்குள் மாத்திரம் 24,150 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுள்ளது. 

சட்டவிரோத மதுபான உற்பத்தி, உற்பத்தி செய்யப்பட்ட மதுபானங்களை  தம்வசம் வைத்திருத்தல்,  மதுபான தயாரிப்பிற்கான உற்பத்தி பொருட்கள் வைத்திருத்தல், சட்ட விரோத மதுபான விற்பனை,  உள்ளிட்ட குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த  சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றதாக  மதுபரி திணைக்கள பணிப்பாளர் நாயகம் எச். ஜி. சுமனசிங்க தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு மதுவரி திணைக்களத்தில் தேசிய வருமானம்  130 பில்லியனாக ஈட்ட வேண்டும் என்ற இலக்கு காணப்பட்டது. அதற்கமைய   முடிவுற்ற 6 மாத காலத்திற்குள் 68 பில்லியன்  நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.