(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட  ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் ஒருபோதும் செல்ல மாட்டார்கள் எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் சுய நல தேவைகளுக்காக மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தால் அது கட்சிக்கு இழைக்கும் பாரிய துரோகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி ஆகிய  இரு தரப்பின் உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக் கொள்ள இருப்பதாகவும், அவர்கள்  விடுத்த கோரிக்கைகளுக்கு அமையவே    ஒப்பந்தம் கைச்சாத்திடல் பிற்போடப்பட்டது என  ஐக்கிய தேசிய கட்சியின்  உறுப்பினர்  குறிப்பிட்டுள்ளமை வேடிக்கையாகவுள்ளது.   

தற்போது  ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற போட்டி  ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.  கட்சியின் உள்ளக பிரச்சினையே  ஐக்கிய தேசிய கட்சியை பலவீனப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.