வாள்கள், கத்­திகள் உற்­பத்திசெய்ய யாழில் தடை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கம்­மா­லை­க­ளுக்கு உத்தரவு 

Published By: Priyatharshan

10 May, 2016 | 09:42 AM
image

( மயூரன் )

சட்டத்துக்கு முர­ணான வகையில் வாள்கள், ஆபத்­தான கத்­திகள் என்­ப­வற்றை கம்­மா­லைகள் உற்­பத்தி செய்­வ­தற்குத் தடை­யுத்­த­ரவு பிறப்­பித்­துள்ள யாழ்.மேல் நீதி­மன்றம், அவற்றை வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் உட­ன­டி­யாகக் கைய­ளிக்க வேண்டும் என உத்­த­ர­விட்­டுள்­ளது.

யாழ்.குடா­நாட்டில் வாள்வெட்டுச் சம்­பவங்கள் அதி­க­ரித்­தி­ருக்­கின்­றன. அத்­துடன் ஆபத்­தான கத்­தி­களைக் காட்டி அச்­சு­றுத்தி கொள்­ளைகள் இடம்­பெ­று­வ­தை­ய­டுத்தே இந்த உத்­த­ரவை யாழ். மேல் நீதி­மன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன் பிறப்­பித்­துள்ளார். 

அந்த உத்­த­ரவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள ­தா­வது:

சட்­டத்­திற்கு முர­ணான வகையில் வாள் கள் வைத்­தி­ருப்­பதும், ஆபத்­தான கத்­தி­களை வைத்­தி­ருப்­பதும் சட்­டப்­படி குற்­ற­மாகும். இவற்றை உடை­மையில் வைத்­தி­ருப்­ப­வர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் உட­ன­டி­யாக ஒப்­ப­டைக்க வேண்டும். 

பொலிஸார் நடத்தும் தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளின்­போது, இந்த ஆயு­தங்­களை உடை­மையில் வைத்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால், அவர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும். 

எனவேஇ இத்­த­கைய ஆபத்­தான ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­வர்கள் உட­ன­டி­யாக குடா­நாட்டில் உள்ள பொலிஸ் நிலை­யங்­களில் ஒப்­ப­டைக்க வேண்டும். அவற்றை அந்­தந்த பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிகள் பொறுப்­பேற்க வேண்டும்.

சட்­டத்­திற்கு முர­ணான முறையில் வாள்கள், ஆபத்­தான கத்­திகள் என்­பன குற்றச்செயல்­க­ளுக்குப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­வ­தனால், யாழ்.குடா­நாட்டில் உள்ள கம்­மா­லை­களில் இவற்றை உற்­பத்தி செய்­வதை இந்த நீதி­மன்றம் தடைசெய்­கின்­றது.

நீதி­மன்ற உத்­த­ரவை மீறி இவற்றை உற்­பத்திசெய்து விற்­பனை செய்தால் அல்­லது யாருக்கும் வழங்­கினால் அத்­த­கைய கம்­மா­லை­களின் உரிமம் உட­ன­டி­யாக ரத்துச் செய்­யப்­படும். அத்­த­கைய ஆயு­தங்­களை உற்­பத்தி செய்­த­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

யாழ்.குடா­நாட்டில் பல கம்­மா­லைகள் சட்டத்துக்கு முர­ணான வகையில் வாள் கள் ஆபத்­தான கத்­திகள் என்­ப­வற்றை உற்­பத்தி செய்து விற்­பனை செய்­வ­தையே முக்­கிய தொழி­லாகக் கொண்­டி­ருப்­ப­தாகத் தக­வல் கள் கிடைத்­துள்­ளன. 

குற்றச் செயல்­களில் சம்­பந்­தப்­ப­டு­கின்ற வாள்கள், ஆபத்­தான கத்­திகள் கைப்­பற்­றப்­ப­டும்­போது, அவற்றை உற்­பத்தி செய்யச் சொன்­னது யார்? யார் அவற்றை உற்­பத்தி செய்­தது, எந்தக் கம்­மா­லை­களில் அவைகள் உற்­பத்தி செய்­யப்­பட்­டன என்­பது போன்ற தக­வல்­களை பொலி­ஸாரின் விசா­ர­ணை­யின்­போது சம்­பந்­தப்பட்டவர்கள் தெரி­விக்க வேண்­டிய நிலை ஏற்­படும். 

இந்தத் தக­வல்­களின் அடிப்­ப­டையில் வாள்கள், கத்திகளை உற்பத்தி செய்த கம்மாலைகளின் உரிமையாளர்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்களும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். 

அந்தக் கம்மாலைகளின் உரிமமும் ரத்துச் செய்யப்படும். இவ்வாறு நீதிபதி இளஞ்செழியன் தமது உத்தரவில் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30