எம்.நியூட்டன்
பெளத்தமதம் முதன்மையானது என்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் எனத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா இந்தியா, இலங்கையில் உள்ள இந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள அடக்கு முறையை தடுத்து நிறுத்தி மதங்களுக்கிடையிலான சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்
இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நல்லை ஆதின முன்றலில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பெளத்தமத ஆதிக்கத்தினால் இது பெளத்த நாடு என்று கூறிக்கொண்டு எங்கள் மீது மிகப்பெரிய அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது. பெளத்தமதம் முதன்மையானது என்றும் அதனை அனைவரும் எற்றுக்கொள்ளவேண்டும் என்றும் கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம். இந்து ஆலயங்கள் போர்க்காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி அளிக்கப்பட்ட வரலாறுகள் இருக்கின்றன இதேபோலத்தான் தற்போது மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்பட்டு வருகிறது
இந்தியாவில் நூற்றுக்கணக்கான மதங்கள், இனங்கள், பிராந்தியங்கள் இருக்கின்றபோதும் அங்கு இந்து மதத்தினர் பெரும்பாலாக இருந்த போதிலும் கூட அந்த நாடு மதச்சார்பற்ற நாடாக அரசியலமைப்பு ரீதியாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாட்டில் பௌத்த மக்கள் பெரும்பான்மையாக உள்ளதனால் பெளத்த மதத்தை அனைவரும் ஏற்றுக் கொள்ளவேண்டும். அது தான் முதன்மை மதம் அரச மதம் எனக் கூறுவதை நாங்கள் ஏற்கமாட்டோம். மதங்கள் சமத்துவமாக இருக்கவேண்டும் மத நம்பிக்கையுள்ளவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் ஆலயங்கள் பாதுகாக்கப்படவேண்டும்
மக்களின் விடுதலைக்காகவும் மதங்களின் சமத்துவத்திற்காகவும் தொடந்தும் நாங்கள் பாடுபடுவோம். இதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM