யாழ்ப்­பா­ணம் தெல்­லிப்­ப­ழை­ பகுதியில் வீட்­டிலிருந்த  கயிற்­றில் தொங்கி விளை­யா­டிய சிறு­வன் அதில் சிக்­கிக் கொண்டு பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் சிவ­பா­லன் அச்­ச­யன் (வயது-11) என்ற மாண­வனே இவ்­வாறு பரி­தா­ப­­மாக உயி­ரி­ழந்­துள்­ளான்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 24ஆம் திகதி வீட்­டில் கட்­டப்­பட்­டி­ருந்த கயிற்­றைப் பிடித்து சிறு­வன் விளை­யா­டிக் கொண்­டி­ருந்த போது அவ­னது தாயார் விளை­யாட வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தி­விட்டு. மதிய உணவு தயா­ரிப்­பில் ஈடு­பட்­டுள்­ளார்.

சிறிது நேரத்­தில் சிறு­வனை அழைத்­த­போது அவ­னது சத்­தத்­தைக் காண­வில்லை என்று விளை­யா­டிய இடத்­தில் தேடி­ய போது  சிறு­வ­னது கழுத்­தில் கயிறு இறு­கி­யி­ருப்­பதை கண்­ட. தாய் உட­ன­டி­யாக உறவினர்களின் உதவியுடன்  தெல்­லிப்­பழை  வைத்தியசாலைக்கு எடுத்­துச் சென்­றுள்­ளார்.

இதையடுத்து குறித்த சிறு­வன் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பாண போதனா வைத்தியசாலையில் சேர்க்­கப்­பட்­ட நிலையில்  நேற்று குறித்த சிறு­வன் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­துள்­ளான்.

இந்நிலையில் குறித்த சிறு­வ­னின் இறப்பு விசா­ர­ணையை யாழ்ப்­பா­ணம் போதனா வைத்தியசாலை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­கார நம­சி­வா­யம் பிறேம்­கு­மார் மேற்­கொண்­டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.