பேட்டரிகள் இன்றி உப்பு நீரைப் பயன்படுத்தி விளக்குகளை எரியச் செய்து புரட்சிகர கண்டுபிடிப்பொன்றை பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் அயிசா மிஜினோ நிகழ்த்தியிருக்கின்றார். 

சூழலுக்கு பாதிப்பற்ற இந்த கண்டுபிடிப்பானது கடற்கரை பகுதிகளில் வாழும் மக்களுக்கு மிகப் பயனுள்ளதாய் அமையும் எனவும் தேநீர் கோப்பையில் 2 கரண்டி உப்பைச் சேர்த்து அதனுடன் சில இரசாயனங்களை உள்ளிட்டு அதிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் இருந்து பெறப்படும் மின்சார வெளிச்சம் 8 மணி நேரத்திற்கு போதுமானதாகவும் மண்ணெண்ணெய், மின் விளக்குகளைவிட சிக்கனமானதாகவும் உள்ளது.

மேலும், இந்த உப்பு விளக்கிற்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது.