ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான 'ஜனநாயக தேசிய முன்னணி' அமைப்பதற்கான ஒப்பந்தம் நாளை கைச்சாத்திட ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான 'ஜனநாயக தேசிய முன்னணி ' கூட்டணியில் ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கத்துவம் வகிக்கும் பங்காளிக்கட்சிகளான ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய, மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நாளைய தினம் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் கைச்சாத்திடவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.